< Back
புதுச்சேரி
புதுச்சேரி
சாலையோரம் தேங்கி நிற்கும் கழிவுநீர்
|8 July 2023 12:00 AM IST
தவளக்குப்பத்தில் சாலையோரம் தேங்கி நிற்கும் கழிவுநீர் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
அரியாங்குப்பம்
புதுச்சேரி-கடலூர் சாலையில் தவளக்குப்பம் பகுதியில் போக்குவரத்து சிக்னல் உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசி வருகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியை கடக்க பொதுமக்கள் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.