< Back
புதுச்சேரி
சாலையில் பெருக்கெடுத்து ஓடிய கழிவுநீர்
புதுச்சேரி

சாலையில் பெருக்கெடுத்து ஓடிய கழிவுநீர்

தினத்தந்தி
|
25 Oct 2023 8:15 PM IST

சோனாம்பாளையம் சந்திப்பில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

புதுச்சேரி

புதுவை நகரப்பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுநீர் குருசுக்குப்பம், கருவடிக்குப்பம் பகுதிகளில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்படுகிறது. தற்போது அங்கு வேலைப்பளு அதிகரித்துள்ளதால், கழிவுநீரை திப்புராயப்பேட்டையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்காக குருசுக்குப்பம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கழிவுநீரை கொண்டு செல்ல ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த குழாய்கள் குருசுக்குப்பத்தில் இருந்து பழைய சாராய ஆலை, ரோமன் ரோலண்ட் வீதி, தூய்மா வீதி, பழைய துறைமுகம் வழியாக துப்புராயப்பேட்டை செல்கிறது. இந்த பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சாலையில் கழிவுநீர்

இந்தநிலையில் சோனாம்பாளையம் சந்திப்பில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கடந்த 2 நாட்களாக கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசியதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை அறிந்த பொதுப்பணித்றை ஊழியர்கள் அங்கு சென்று பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்