< Back
புதுச்சேரி
தொழில் வழிகாட்டுதல் குறித்த கருத்தரங்கு
புதுச்சேரி

தொழில் வழிகாட்டுதல் குறித்த கருத்தரங்கு

தினத்தந்தி
|
21 Sept 2023 10:18 PM IST

காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

காரைக்கால்

காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி வணிகவியல் துறை, கல்லூரி பெற்றோர் ஆசிரியர் நல சங்கம் சார்பில் தொழில் வழிகாட்டுதல் மற்றும் சாலை பாதுகாப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் பாலாஜி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் நல சங்க தலைவர் வின்சென்ட், துணை தலைவர் நெல்சன் ஆகியோர் தொடக்க உரையாற்றினர். வணிகவியல் துறை தலைவர் சாந்தி, ஐ.க்யூ ஏ.சி. துறை தலைவர் அம்பிகா தேவி ஆகியோர் பங்கேற்று பேசினர். தொடர்ந்து, மாணவிகளின் எதிர்கால வேலைவாய்ப்புகள், வேலை வாய்ப்புக்கான கல்வி, பயிற்சி தேர்வு முறைகள், பெண்களுக்கான பாதுகாப்பான வாழ்க்கை வழிமுறைகள் குறித்து ஜெயஸ்ரீ விஜய் பேசினார்.

சாலை பாதுகாப்பு, பெண்கள் வாகன உரிமம் குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் கல்விமாறன் விளக்கினார். இதில் வணிகவியல் துறை மாணவிகள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியர் மற்றும் மாணவிகள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்