< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
'புதுச்சேரியில் அரசு செயலர்கள் தங்கள் துறைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை' - முதல்-மந்திரி ரங்கசாமி அதிருப்தி
|21 Dec 2023 6:54 AM IST
அதிகாரிகள் தங்கள் துறைகளைப் பற்றி கவலைப்படாததால் திட்டங்களைக் கொண்டு வந்து என்ன பயன் என ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் கழிவுநீர் பராமரிப்பு இயந்திரங்கள் மற்றும் சிறப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி, புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்-மந்திரி ரங்கசாமி, புதுச்சேரியில் அரசு செயலர்கள் தங்கள் துறைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை என அதிருப்தி தெரிவித்தார். அதிகாரிகள் தங்கள் துறைகளைப் பற்றி கவலைப்படாததால் திட்டங்களைக் கொண்டு வந்து என்ன பயன் என அவர் சாடினார்.