< Back
புதுச்சேரி
புதுச்சேரி
அறிவியல் கண்காட்சி
|12 March 2023 10:37 PM IST
பாகூர் கொம்யூன் மதிகிருஷ்ணாபுரத்தில் உள்ள பவானி வித்யாஸ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது
பாகூர்
பாகூர் கொம்யூன் மதிகிருஷ்ணாபுரத்தில் உள்ள பவானி வித்யாஸ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் நாராயணன் தலைமை தாங்கினார். செயலாளர் மகாலட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக அறுபடை வீடு மருத்துவ கல்லூரியின் இணை பேராசிரியர் சம்பந்தம், உதவி பேரா சிரியர் மோகன்தாஸ் ஆகியோர் கலந்துகொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.
300-க்கும் மேற்பட்ட அறிவியல் திறன்சார்ந்த மாணவ-மாணவிகளின் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. இதனை பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் பார்வையிட்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை ஏஞ்சலின் தேவக்குமாரி நன்றி கூறினார