< Back
புதுச்சேரி
பள்ளி பஸ் டிரைவருக்கு மிரட்டல்
புதுச்சேரி

பள்ளி பஸ் டிரைவருக்கு மிரட்டல்

தினத்தந்தி
|
18 Jun 2023 11:18 PM IST

புதுச்சேரியில் பள்ளி பஸ் டிரைவருக்கு மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி

புதுச்சேரி ஆம்பூர் சாலை பகுதியை சேர்ந்தவர் வீரபாரதி (வயது 50). தனியார் பள்ளி பஸ் டிரைவர். நேற்று இவர், மரப்பாலம் சந்திப்பில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் மறைமலை நகர் பகுதியை சேர்ந்த மாதவன் (37) என்பவர் குடிபோதையில் தாறுமாறாக ஓட்டினார். அப்போது அவர் திடீரென வீர பாரதியை வழிமறித்து திட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாதவன், வீரபாரதிக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்