< Back
புதுச்சேரி
புதுச்சேரி
மரக்கன்றுகள் நடும் விழா
|30 Jan 2023 9:52 PM IST
புதுச்சேரியில் ஜி20 பிரதிநிதிகள் மாநாட்டையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா பூரணாங்குப்பத்தில் நடந்தது.
புதுச்சேரி
புதுச்சேரி மாநிலத்தில் நடந்த ஜி20 பிரதிநிதிகள் மாநாட்டையொட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மணவெளி தொகுதி பூரணாங்குப்பம் கிராம பஞ்சாயத்துட்பட்ட தாமரைகுளம் அருகே மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவில் சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரி காசிநாதன், உதவி பொறியாளர்கள் ராமன், ராஜ்குமார், இளநிலை பொறியாளர் சிவஞானம், பணி ஆய்வாளர் நற்குணன், தவளகுப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி, தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன் மற்றும் ஆறுமுகம், ஆனந்தன், விஜயலட்சுமி, அய்யனார், தமிழ்கும்பா, ராஜகுரு, திருஞானம், காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.