< Back
புதுச்சேரி
புதுச்சேரி
பெண்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு
|7 July 2023 9:59 PM IST
அரியூர் இந்திராணி செவிலியர் கல்லூரியில் பெண்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைப்பெற்றது.
திருபுவனை
புதுச்சேரி ராமச்சந்திரா கல்வி குழுமத்தின் கீழ் இயங்கி வரும் அரியூர் இந்திராணி செவிலியர் கல்லூரி வளாகத்தில் பெண்களுக்கான சுய பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கை ராமச்சந்திரா கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் வித்யா தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் மல்லிகா முன்னிலை வகித்தார். இணை பேராசிரியர் அபிதா வரவேற்றார். சமுதாயத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு சட்ட விதிமுறைகள், காவல்துறை அணுகுமுறை, பெண் குழந்தைகளை பாதுகாத்தல் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ரச்சனாசிங் எடுத்துரைத்தார்.
முடிவில் மகப்பேறு செவிலியர் துறை இணை பேராசிரியர் கவிதா நன்றி கூறினார்.