< Back
புதுச்சேரி
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்
புதுச்சேரி

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்

தினத்தந்தி
|
9 May 2023 11:27 PM IST

வில்லியனூரில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் இன்று நடந்தது

வில்லியனூர்

ஆர்.எஸ்.எஸ். சார்பில் 21 நாள் பண்பு பயிற்சி முகாம் வில்லியனூரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்து வருகிறது. இந்த பயிற்சியில் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சியின் ஒரு பகுதியாக அணிவகுப்பு ஊர்வலம் இன்று நடந்தது. ஊர்வலத்தை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வில்லியனூர் தனியார் திருமண நிலையம் அருகே தொடங்கிய இந்த ஊர்வலம் எம்.ஜி.ஆர். சிலை, அண்ணா சிலை, கிழக்கு கோபுர வீதி, கோட்டைமேடு பைபாஸ் சாலை வழியாக சென்று மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே முடிவடைந்தது.

ஊர்வலத்தில் முகாம் தலைவர் மணிவாசகம், வரவேற்பு குழுத் தலைவர் அரவிந்தன், புதுச்சேரி ஆர்.எஸ்.எஸ். கோட்ட தலைவர் ஆடிட்டர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்