< Back
புதுச்சேரி
புதுவை மீனவர்களுக்கு ரூ.79 லட்சம் உதவித்தொகை
புதுச்சேரி

புதுவை மீனவர்களுக்கு ரூ.79 லட்சம் உதவித்தொகை

தினத்தந்தி
|
27 Sept 2023 11:41 PM IST

புதுவையில் மீனவர்களுக்கு 79 லட்சத்து 2 ஆயிரத்தை வங்கிக்கணக்கில் செலுத்தும் நிகழ்ச்சியை சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி

மத்திய அரசின் பிரதான் மந்திரி மட்சய சம்பட யோஜனா திட்டத்தில் கடந்த 2020-21-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் மற்றும் மழைக்காலங்களில் மீன்வளங்களை பாதுகாக்கும் பொருட்டு சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முழுநேர மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவ குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக பதிவு செய்யப்பட்ட சந்தாதாரர்களிடம் இருந்து சந்தாதொகையாக ரூ.1,500 வசூல் செய்யப்பட்டு அதன் 2 மடங்கு தொகையாக மத்திய அரசு வழங்கும் பங்கு தொகையான ரூ.3 ஆயிரத்தை சேர்த்து மொத்த தொகையான ரூ.4 ஆயிரத்து 500 வீதம் ஒவ்வொரு மீனவ பயனாளிக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி நல்லவாடு, புதுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 13 மீனவர் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 1,756 உறுப்பினர்களுக்கு தலா ரூ.4 ஆயிரத்து 500 என 79 லட்சத்து 2 ஆயிரத்தை அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தும் நிகழ்ச்சியை சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மீன்வளத்துறை செயலாளர் நெடுஞ்செழியன், இயக்குனர் முகமது இஸ்மாயில், இணை இயக்குனர் தெய்வசிகாமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்