< Back
புதுச்சேரி
புதுச்சேரி
சாலையோரத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணி
|8 July 2023 11:32 PM IST
புதுச்சேரி கிருமாம்பாக்கம் சாலையோரத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
பாகூர்
புதுச்சேரி பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு சார்பில் புதுச்சோி-கடலூர் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் சாலையோரத்தில் கழிவுநீர் வாய்க்கால், பாலம், தடுப்புச்சுவர் கட்டும் பணியும் நடந்து வருகிறது. அதன்படி கிருமாம்பாக்கம் ராஜீவ்காந்தி பொறியியல் கல்லூரி அருகில் உள்ள பாசன வடிகால் பகுதியில் சுமார் 700 மீட்டர் தூரத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த பணிகளை செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியை தரமாகவும், விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து காட்டுக்குப்பம், முள்ளோடை, பிள்ளையார்குப்பம், கந்தன்பேட் பகுதியில் வடிகால் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.