< Back
புதுச்சேரி
புதுச்சேரி
நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்தில் சாலைப் பணிகள்
|16 Jun 2023 10:12 PM IST
நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்தில் சாலைப் பணிகளை கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு செய்தார்,
காரைக்கால்
காரைக்காலை அடுத்த நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அண்டூர் முதல் ஆத்தங்கரை வரை பேட்கோ மூலம் ரூ.33 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, சாலை அமைக்கும் பணியை விரைவில் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். மேலும், பணி முடித்த பருத்திக்குடி சாலையையும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
வட்டார வளர்ச்சி துறை மூலம் பொன்பேத்தி கிராமத்தில் நடைபெறும் 100 நாள் வேலை பணிகளையும் கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு செய்தார். அப்போது வட்டார வளர்ச்சி அதிகாரி சச்சிதானந்தம், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பாலன், வட்டாட்சியர் பொய்யாத மூர்த்தி மற்றும் பேட்கோ அதிகாரிகள் உடனிருந்தனர்.