< Back
புதுச்சேரி
புதுச்சேரி
ரூ.42 லட்சத்தில் சாலை மேம்பாட்டு பணி
|23 Aug 2023 10:51 PM IST
எல்லைப்பிள்ளைசாவடியில் ரூ.42 லட்சத்தில் சாலை மேம்பாட்டு பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி
புதுவை கதிர்காமம் தொகுதிக்குட்பட்ட எல்லைப்பிள்ளைசாவடி அய்யனார் கோவில் வீதி ரூ.42 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து தொடங்கிவைத்தார்.நிகழ்ச்சியில் கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பழனியப்பன், கட்டிடங்கள் மற்றும் சாலைகள் மத்திய கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் பார்த்தசாரதி, இளநிலை பொறியாளர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.