< Back
புதுச்சேரி
பி.டெக் படிப்புக்கான திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல்
புதுச்சேரி

பி.டெக் படிப்புக்கான திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல்

தினத்தந்தி
|
27 Jun 2023 10:03 PM IST

புதுவையில் பி.டெக் படிப்பில் சேருவதற்கான திருத்தப்பட்ட தரவரிசை பட்டியலை சென்டாக் நிர்வாகம் இன்று வெளியிட்டது.

புதுச்சேரி

பி.டெக் படிப்பில் சேருவதற்கான திருத்தப்பட்ட தரவரிசை பட்டியலை சென்டாக் நிர்வாகம் இன்று வெளியிட்டது.

பி.டெக் படிப்பு

புதுவையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.டெக் படிப்புக்கான மாணவர் சேர்க்கை சென்டாக் மூலம் நடக்கிறது. இந்த மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அதைத்தொடர்ந்து மதிப்பெண் அடிப்படையில் உத்தேச தரவரிசை பட்டியல் கடந்த 21-ந்தேதி வெளியிடப்பட்டது. இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்றும் சென்டாக் அறிவுறுத்தி இருந்தது.

திருத்தப்பட்ட பட்டியல்

இதைத்தொடர்ந்து திருத்தப்பட்ட தரவரிசை பட்டியில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியிலில் புதுச்சேரி மாநில பிரிவில் 4 ஆயிரத்து 740 பேர் இடம்பெற்றுள்ளனர். பிறமாநிலத்தில் இருந்து விண்ணப்பித்த 831 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கான மதிப்பெண் விவரங்களுடன் இந்த திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டது.

விரைவில் மாணவர்களுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்