< Back
புதுச்சேரி
புதுச்சேரி
ஓய்வுபெற்ற காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை
|1 Sept 2023 10:15 PM IST
புதுவை அருகே தீராத நோயால் ஓய்வுபெற்ற காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
புதுச்சேரி
புதுவை முத்தரையர்பாளையம் காந்தி வீதியை சேர்ந்தவர் ஞானசந்திரன் (வயது 70). கல்வித்துறையில் காவலாளியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பொம்மையம்மாள் (64). கடந்த சில மாதங்களாக ஞானசந்திரன் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் இன்று காலை வீட்டின் பின்புறத்தில் உள்ள கழிவறையில் தனது இடுப்பில் கட்டிய அரைஞாண் கயிறால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஞானசந்திரன் உயிரிழந்தார்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.