< Back
புதுச்சேரி
புதுச்சேரி
சிவாஜி கணேசன் சிலைக்கு மரியாதை
|1 Oct 2023 11:40 PM IST
புதுவை அரசு சார்பில் சிவாஜி கணேசன் பிறந்த நாளையெட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
புதுச்சேரி
புதுச்சேரி அரசு சார்பில் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கருவடிக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.