< Back
புதுச்சேரி
நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு
புதுச்சேரி

நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு

தினத்தந்தி
|
7 July 2022 11:35 PM IST

படகில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் நடுகடலில் தத்தளித்த மீனவர்களை கடலோர காவல் படையினர் மீட்டனர்.

புதுச்சேரி

புதுச்சேரி வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் சுசித்ரா. இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 5-ந் தேதி கந்தவேலு உள்பட 9 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இன்று காலை ஆலம்பாறை கடல் பகுதியில் கந்தவேலு சென்ற படகின் என்ஜீன் பழுதானது. இதனால் படகில் சென்ற மீனவர்கள் ஆழ்கடலில் தத்தளித்தனர்.

இது குறித்து படகில் இருந்த மீனவர்கள் புதுச்சேரி இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடலோர காவல்படைக்கு சொந்தமான படகில் வீரர்கள் சென்று நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை படகுடன் மீட்டு தேங்காய்திட்டு துறைமுகத்திற்கு பத்திரமாக அழைத்து வந்தனர்.

மேலும் செய்திகள்