< Back
புதுச்சேரி
பாகூர் பகுதியில் மூடப்பட்ட வாய்க்கால் சீரமைப்பு
புதுச்சேரி

பாகூர் பகுதியில் மூடப்பட்ட வாய்க்கால் சீரமைப்பு

தினத்தந்தி
|
23 Jun 2023 9:53 PM IST

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக பாகூர் பகுதியில் மூடப்பட்ட வாய்க்கால் சீரமைக்கப்பட்டது.

பாகூர்

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக பாகூர் பகுதியில் மூடப்பட்ட வாய்க்கால் சீரமைக்கப்பட்டது.'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக பாகூர் பகுதியில் மூடப்பட்ட வாய்க்கால் சீரமைக்கப்பட்டது.'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக பாகூர் பகுதியில் மூடப்பட்ட வாய்க்கால் சீரமைக்கப்பட்டது.

புறவழிச்சாலை பணி

விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் எம்.என்.குப்பத்தில் இருந்து தெற்கு நோக்கி மங்கலம், பரிக்கல்பட்டு, சேலியமேடு, பாகூர் வழியாக கடலூருக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த புறவழிச்சாலை பணியால் பாகூர்- பின்னாச்சிக்குப்பம் சாலையில் உள்ள பாசன வாய்க்கால் மூடப்பட்டது. இதேபோல் பல இடங்களில் வடிகால் வாய்க்கால்கள் மூடப்பட்டன. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பாகூர்- பின்னாச்சிக்குப்பம் வாய்க்காலில் மழைநீர் நிரம்பி, குடியிருப்பு பகுதியில் சூழ்ந்தது.

வாய்க்கால் சீரமைப்பு

இது பற்றி 'தினத்தந்தி'யில் இன்று படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதை பார்த்த பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் நீர்ப்பாசன பிரிவு, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பேசி, வாய்க்காலை சீரமைத்து, தேங்கிய தண்ணீர் வடிந்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் குறுகலாக உள்ள வாய்க்காலை தூர்வாரி அகலப்படுத்தவும் கூறினார்.

இதையடுத்து பொக்லைன் எந்திரம் உதவியுடன் முதல்கட்டமாக இன்று பாகூர் - பின்னாச்சிக்குப்பம் சாலையில் மூடப்பட்ட வாய்க்கால் சரி செய்யப்பட்டது.

வாய்க்காலை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுத்த செந்தில்குமார் எம்.எல்.ஏ.வுக்கும், தினத்தந்திக்கும் பொதுமக்கள், விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்