< Back
புதுச்சேரி
ரூ.45 லட்சத்தில் புனரமைக்கும் பணி
புதுச்சேரி

ரூ.45 லட்சத்தில் புனரமைக்கும் பணி

தினத்தந்தி
|
12 Aug 2023 10:38 PM IST

முத்தியால்பேட்டை தொகுதி சின்னாத்தா அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.45 லட்சத்தில் புனரமைக்கும் பணியை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

முத்தியால்பேட்டை

முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகர் வீதியில் உள்ள சின்னாத்தா அரசு மேல்நிலைப்பள்ளியின் அனைத்து வகுப்பறைகளும் பழுதடைந்து இருந்தது. இது குறித்து பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமாரிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் கல்வித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி பழுதை நீக்கி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து பழுதுகளை நீக்கி, பள்ளி முழுவதும் வர்ணம் பூசி வகுப்பறைகளை புதுப்பிக்க ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த பணிகளுக்கான பூமி பூஜையை, பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு மழைக்கோட்டும் வழங்கினார். மேலும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளியில் மரக்கன்று நட்டார். இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், உதவி பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் ராமதாசன், பள்ளி முதல்வர் சாய் வர்கீஸ் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்