< Back
புதுச்சேரி
புதுச்சேரி
ரூ.64 லட்சத்தில் மாணவிகள் விடுதி சீரமைப்பு
|7 Sept 2023 11:15 PM IST
நெடுங்காட்டில் ரூ.64 லட்சத்தில் மாணவிகள் விடுதி சீரமைப்பு பணியை அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கி வைத்தார்.
காரைக்கால்
புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் காரைக்காலை அடுத்த நெடுங்காடு தொகுதியில் அமைந்துள்ள மாணவிகள் தங்கும் விடுதி ரூ.64 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது. இந்த பணிகளை புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உதவி இயக்குனர் மதன்குமார், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சிதம்பரநாதன், உதவி பொறியாளர் அருளரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம், அமைச்சர் கூறினார்.