சாலை தடுப்பு சுவர் அகற்றம்
|புதுவை மறைமலையடிகள் சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர் இன்று பொக்லைன் எந்திரத்தின் மூலம் அகற்றப்பட்டன.
புதுச்சேரி
புதுவை மறைமலையடிகள் சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர் இன்று பொக்லைன் மூலம் அகற்றப்பட்டன.
மேம்பாட்டுப்பணி
புதுவை மறைமலையடிகள் சாலையில் நெல்லித்தோப்பு சிக்னல் முதல் வெங்கடசுப்பாரெட்டியார் சிலைவரை உள்ள பகுதியில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது. இதனால் வாகனங்கள் தடையின்றி செல்ல சாலையின் நடுவில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளன.
அதாவது ஒருவழிப்பாதையிலேயே சாலையின் நடுவில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து பிரிக்கப்படுகிறது. குறிப்பாக நெல்லித்தோப்பு சிக்னலில் இருந்து பஸ் நிலையத்துக்கு வந்து செல்லும் வாகனங்களுக்கு தனி வழியாகவும், நேரடியாக செல்லும் வாகனங்கள் செல்ல வசதியாக தனி வழியாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தடுப்பு சுவர் அகற்றம்
இதேபோல் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலையிலிருந்து நெல்லித்தோப்பு சிக்னல் வரை ஆங்காங்கே பயணிகளை ஏற்றிசெல்லும் டவுண் பஸ்கள் தனி வழியும், நேரடியாக செல்லும் மற்ற பஸ்கள், வாகனங்களுக்கு தனி வழியும் உள்ளது. இந்த சாலைகள் ஒரே உயரத்தில் இல்லாமல் உள்ளன.
தற்போது இந்த சாலையை மேம்படுத்த (புதிய சாலை அமைக்க) திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இருபுறமும் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் இன்று பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன. விரைவில் புதிதாக சாலை அமைக்கப்பட உள்ளது. அதன்பின் போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப தடுப்புகளை அமைக்க பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.