< Back
புதுச்சேரி
புதுச்சேரி
4,979 விவசாயிகளுக்கு நிவாரண தொகை
|7 Oct 2022 10:18 PM IST
கன மழையால் பாதிக்கப்பட்ட 4,979 விவசாயிக்கான நிவாரண தொகையை வங்கி கணக்கில் செலுத்தும் நிகழ்ச்சியை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்தார்.
கடந்த 2021-22-ம் ஆண்டில் கனமழை பெய்தபோது, காரைக்காலில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. நாசமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
அதன்படி காரைக்காலை சேர்ந்த 4,979 விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வீதம் ரூ. 3 கோடியே 28 லட்சத்து 30 ஆயிரத்து 200 அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இதையொட்டி அமைச்சர் சந்திர பிரியங்கா நிவாரணத்தொகையை விவசாயிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், கூடுதல் வேளாண் இயக்குனர் செந்தில்குமார், துணை வேளாண் இயக்குனர் ஜெயந்தி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.