< Back
புதுச்சேரி
புதுச்சேரி
பண்டக காப்பாளர் சீனியாரிட்டி பட்டியல் வெளியீடு
|6 Oct 2023 11:17 PM IST
புதுவை அரசு பண்டக காப்பாளர் சீனியாரிட்டி பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது.
புதுச்சேரி
புதுவை அரசின் பல்வேறு துறைகளில் ஊழியர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பண்டக காப்பாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 33 பண்டக காப்பாளர்களின் சீனியாரிட்டி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் வருகிற 31-ந்தேதிக்குள் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை கணக்கு மற்றும் கருவூலத்துறை இயக்குனர் பிரபாவதி வெளியிட்டுள்ளார்.