< Back
புதுச்சேரி
கருணாநிதி உருவப்படத்திற்கு ரங்கசாமி மரியாதை
புதுச்சேரி

கருணாநிதி உருவப்படத்திற்கு ரங்கசாமி மரியாதை

தினத்தந்தி
|
7 Aug 2023 11:28 PM IST

புதுச்சேரி அரசு சார்பில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.

புதுச்சேரி

புதுச்சேரி அரசு சார்பில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவ படத்திற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சந்திரபிரியங்கா, துணை சபாநாயகர் ராஜவேலு, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, எம்.எல்.ஏ.க் கள் ஏ.கே.டி. ஆறுமுகம், பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தி, அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்