< Back
புதுச்சேரி
புதுச்சேரி
பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் ரெயில் நிலைய மேம்பாட்டு பணி
|15 Oct 2023 11:59 PM IST
காரைக்காலில் பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்கால்
காரைக்கால் ரெயில் நிலையத்தில் மத்திய அரசின் நிதி உதவியோடு பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடைமேடை மேம்படுத்தும் பணி தற்போது நடக்கிறது. ஒரே நேரத்தில் மூன்று நடைமேடைகள் மற்றும் ரெயில் நிலையத்தின் வாசல் பகுதி தோண்டப்பட்டுள்ளது.
இந்த பள்ளம் மூடப்படாததால் மழையால் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக உடமைகளை தூக்கிச்செல்லும் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்
எனவே பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.