< Back
புதுச்சேரி
புதுச்சேரி
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வினாடி-வினா போட்டி
|26 Sept 2023 9:37 PM IST
காரைக்காலில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வினாடி-வினா போட்டி நடந்தது.
காரைக்கால்
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 27-ந் தேதி உலக சுற்றுலா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி காரைக்கால் மாவட்ட நிர்வாகமும் சுற்றுலாத்துறையும் இணைந்து பல்வேறு போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி கபடி, பீச் வாலிபால், மணல் சிற்பம், வினாடி-வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன. இதன் தொடக்க நிகழ்ச்சியாக இன்று காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் வினாடி-வினா போட்டி நடந்தது. போட்டியை மாவட்ட துணை கலெக்டர் ஜான்சன் தொடங்கி வைத்து பேசினார். போட்டியில் 11 கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் சாந்தி, பேராசிரியர் ரேகா ஆகியோர் செய்திருந்தனர்.