புதுவை: நட்சத்திர கிரிக்கெட் போட்டி - நடிகர் மா.க.பா அணி சாம்பியன் பட்டம் வென்றது
|புதுவையில் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்று விளையாடிய நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் நடிகர் மா.க.பா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சேதராப்பட்டு,
புதுவை துத்திப்பட்டு சி.ஏ.பி கிரிக்கெட் மைதானத்தில் சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி நடந்து முடிந்தது. 6 அணிகளாகப் பிரிந்து 9 போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில், நடிகர் ம.கா.பாவின் சில்க் ஸ்மிதா அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது.
திரைப்பட நடிகர் மகேந்திரன் அணி இரண்டாவது இடத்தை பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா துத்திப்பட்டு சி.ஏ.பி கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. பரிசளிப்பு விழாவில் நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் மேலான இயக்குனர் நடிகை நிரோஷா முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா, சுற்றுலாத்துறை செயலர் அருண் மற்றும் மார்க் மேலாண் இயக்குனர் நந்தகுமார், ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் என்ற மா.க.ப அணிக்கு கோப்பை மற்றும் பரிசு பொருட்களை வழங்கினர்.