< Back
புதுச்சேரி
புதுச்சேரி: பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு போலீசார் அளித்த விருந்து
புதுச்சேரி

புதுச்சேரி: பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு போலீசார் அளித்த விருந்து

தினத்தந்தி
|
8 May 2024 10:05 PM IST

பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு வாழை இலையுடன் போலீசார் விருந்தளித்தனர்.

புதுச்சேரி,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 6-ந்தேதி வெளியானது. இதில் ஒரு அரசு பள்ளி உள்பட 55 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் திருப்புவனை காவல் நிலையத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு போலீசார் சால்வை அணிவித்து கவுரவித்தனர். பின்னர் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு வாழை இலையுடன் போலீசார் விருந்தளித்தனர்.


மேலும் செய்திகள்