< Back
புதுச்சேரி
புதுச்சேரி
புதுச்சேரி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
|18 Feb 2023 10:40 PM IST
புதுவை வக்கீல்கள் சங்கத்தின் சார்பாக சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2011-ம் ஆண்டு வக்கீல்களும், போலீசாரும் மோதிக்கொண்ட நிகழ்வை முன்னிட்டு வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்தனர்.
புதுச்சேரி
சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந்தேதி வக்கீல்களும், போலீசாரும் மோதிக்கொண்டனர். இந்த நாளை வக்கீல்கள் கருப்பு தினமாக கடைபிடித்து வருகின்றனர். இதையொட்டி இன்று புதுவை வக்கீல்கள் சங்க தலைவர் குமரன் தலைமையில் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு செய்தனர். அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வக்கீல் சங்க அறையில் இருந்தனர். வக்கீல்களின் போராட்டம் காரணமாக இன்று விசாரணைக்கு வந்த வழக்குகளை நீதிபதிகள் வேறோரு தேதிக்கு தள்ளிவைத்தனர்.