< Back
புதுச்சேரி
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை பொது இடங்களில் நேரலை செய்ய புதுச்சேரி அரசு அனுமதி
புதுச்சேரி

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை பொது இடங்களில் நேரலை செய்ய புதுச்சேரி அரசு அனுமதி

தினத்தந்தி
|
21 Jan 2024 10:39 PM IST

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது.

புதுச்சேரி,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா 22-ந்தேதி(நாளை) நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பொது இடங்களில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை நேரலை செய்ய அனுமதி அளித்து புதுச்சேரி அரசின் உள்துறை மந்திரி நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக புதுச்சேரியில் நாளை பொது விடுமுறை அளித்து முதல்-மந்திரி ரங்கசாமி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்