< Back
புதுச்சேரி
புதுச்சேரி: ஆதார் விவரங்களை புதுப்பிக்க செப்டம்பர் 14-ந்தேதி வரை அவகாசம்
புதுச்சேரி

புதுச்சேரி: ஆதார் விவரங்களை புதுப்பிக்க செப்டம்பர் 14-ந்தேதி வரை அவகாசம்

தினத்தந்தி
|
30 Aug 2023 10:33 PM IST

ஆதாரில் உள்ள விவரங்களை பொதுமக்கள் புதுப்பிக்க வேண்டும் என புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் பொதுமக்களின் ஆதாரில் உள்ள அடையாளச் சான்று, முகவரிச் சான்று உள்ளிட்ட விவரங்களைக் கொண்டே அரசு நலத்திட்டங்கள் மற்றும் அரசின் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே ஆதாரில் உள்ள விவரங்களை பொதுமக்கள் புதுப்பிக்க வேண்டும் என புதுச்சேரி அரசு உத்தரவிட்டது.

இது குறித்து திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மக்கள் தங்களின் ஆதார் தகவல்களை எப்போதும் புதுப்பித்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் எனவும், இதற்காக 'மை ஆதார்' என்ற இணையதளம் மூலம் ஆதார் விவரங்களை புதுப்பித்துக் கொள்வதற்கான கால அவகாசம் வரும் செப்டம்பர் 14-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்