< Back
புதுச்சேரி
புதுச்சேரி
புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்படும் - கல்வித்துறை மந்திரி அறிவிப்பு
|7 April 2023 11:02 PM IST
ஏப்ரல் 20-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வித்துறை மந்திரி நமச்சிவாயம் தெரிவித்தார்.
புதுச்சேரி,
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவது குறித்து புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமியிடம், கல்வித்துறை மந்திரி நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை முழு ஆண்டுத்தேர்வுகள் 11-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை முன்கூட்டியே நடத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் ஏப்ரல் 20-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.