தூய்மைப்பணியில் பொதுமக்கள் பங்களிப்பது அவசியம்
|நாளை மறுநாள் நடைபெறும் தூய்மைப்பணியில் பொதுமக்கள் பங்கெப்பு அவசியம் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி வேண்டுகோள் விடுத்தார்.
புதுச்சேரி
நாளை மறுநாள் நடைபெறும் தூய்மைப்பணியில் பொதுமக்கள் பங்கெப்பு அவசியம் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி வேண்டுகோள் விடுத்தார்.
தூய்மை சேவை
மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் தூய்மைசேவை இருவார நலப்பணி நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நாடு தழுவிய ஒன்றிணைந்த மாபெரும் தூய்மைப்பணி நடத்தப்பட உள்ளது.
புதுச்சேரியில் அன்றைய தினம் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் நடக்கிறது. இந்த தூய்மைப்பணி குறித்த விழிப்புணர்வு பதாகைகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி அவரது அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.சரவணன்குமார், கலெக்டர் வல்லவன், உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள்
இந்த தூய்மைப்பணியில் பொதுமக்களும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-
நாடு தழுவிய தூய்மைக்கான தன்னார்வ பங்களிப்பு பணி நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது. புதுவை மாநிலத்தை தூய்மையான மாநிலமாக மாற்றும் இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரியை சேர்ந்த நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்பது அவசியம் ஆகும். புதுவை மாநிலத்தை சுத்தமாக வைத்திருக்க அனைவரும் தூய்மைப்பணியை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.