< Back
புதுச்சேரி
புதுச்சேரி
இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
|28 July 2023 11:46 PM IST
புதுவையில் தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிகளிலும் தேசிய கல்வி கொள்கை நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தக்கூடாது, அனைத்து பாடப்பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் காலாப்பட்டு பல்கலைக்கழகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் கோபி தலைமை தாங்கினார். செயலாளர் பிரவீன்குமார், துணை தலைவர் அபிஜித் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் நிர்வாகிகள் வந்தனா, சாய், விஜீஷ் மற்றும் நூருதீன் மற்றும் மாணவர் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.
---