< Back
புதுச்சேரி

புதுச்சேரி
துணை தாசில்தாராக பதவி உயர்வு

25 Jun 2023 11:31 PM IST
புதுவையில் 13 வருவாய் ஆய்வாளர்களுக்கு, துணை தாசில்தார்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி
புதுச்சேரி வருவாய்துறையில் பணியாற்றி வரும் 13 வருவாய் ஆய்வாளர்களுக்கு, துணை தாசில்தார்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் முதல்-அமைச்சர் அலுவலகத்தில் நடந் தது. நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு அவர்களுக்கு பதவி உயர்வுக்கான ஆணையை வழங்கினார். இதில் சபாநாயகர் செல்வம், மாவட்ட கலெக்டர் வல்லவன், துணை கலெக்டர் வினயராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.