< Back
புதுச்சேரி
புதுச்சேரி
தனியார் நிறுவன மேலாளர் சாவு
|2 July 2023 11:40 PM IST
புதுவையில் தனியார் நிறுவன மேலாளர் சாலையின் குறுக்கே நாய் சென்றதால் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பலியானார்.
வில்லியனூர்
திருபுவனை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 50). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே நாய் ஒன்று ஓடியது. அதன்மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் பிடித்தபோது, நிலைதடுமாறிய பிரபாகரன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரபாகரன் இன்று இரவு உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில் வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.