< Back
புதுச்சேரி
தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
புதுச்சேரி

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

தினத்தந்தி
|
4 Aug 2023 10:37 PM IST

புதுவையில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனூர்

வில்லியனூர் அடுத்த ஆரியபாளையத்தை சேர்ந்தவர் செல்வம். தையல் தொழிலாளி. இவரது மகன் அரவிந்த் (வயது 21). இவர் பத்துக்கண்ணு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக அவர் வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று வீட்டின் முதல் மாடியில் உள்ள அறையில் அரவிந்த் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரவிந்த் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்