< Back
புதுச்சேரி
தனியார் நிறுவன ஊழியர் பலி
புதுச்சேரி

தனியார் நிறுவன ஊழியர் பலி

தினத்தந்தி
|
22 July 2022 11:53 PM IST

மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

பாகூர்

வில்லியனூர் அடுத்த கிழ்அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 50). தவளக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இன்று மாலை அவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அபிஷேகப்பாக்கம்-கரிக்கலாம்பாக்கம்-திருக்காஞ்சி ஆகிய சாலைகள் ஒன்றிணையும் சந்திப்பில் சென்றபோது, அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்