< Back
புதுச்சேரி
மது போதைக்கு தனியார் பஸ் கண்டக்டர் சாவு
புதுச்சேரி

மது போதைக்கு தனியார் பஸ் கண்டக்டர் சாவு

தினத்தந்தி
|
4 Aug 2023 11:37 PM IST

தவளக்குப்பம் அருகே மது போதையில் தனியார் பஸ் கண்டக்டர் உயிரிழந்தார்.

அரியாங்குப்பம்

தவளக்குப்பம் அடுத்த தானாம்பாளையம் அரவிந்தர் நகர் பகுதியை சேர்ந்த கடலரசன் (வயது 42). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வந்தார். அவரது மனைவி அனிதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடலரசனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் அனிதா கோபித்துக்கொண்டு கடந்த 2017-ம் ஆண்டு தனது பிள்ளைகளுடன் திருப்பரங்குன்றத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அதன் பின்னர் சரிவர வேலைக்கு போகாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இந்த நிலையில் தவளக்குப்பம் பகுதியில் உள்ள சாராயக்கடை அருகே மதுபோதையில் கடலரசன் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் அவரது உடலை பரிசோதித்து விட்டு ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்