< Back
புதுச்சேரி
மேல்நிலை எழுத்தர் தேர்வு தள்ளிவைப்பு
புதுச்சேரி

மேல்நிலை எழுத்தர் தேர்வு தள்ளிவைப்பு

தினத்தந்தி
|
13 Sept 2023 9:17 PM IST

புதுச்சோியில் வருகிற 24-ந் தேதி நடைபெற இருந்த மேல்நிலை எழுத்தா் தோ்வு அடுத்த மாதம் 29-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுவை அரசுத்துறைகளில் மேல்நிலை எழுத்தர் பணிக்கு பதவி உயர்வுக்கான துறை ரீதியிலான எழுத்து தேர்வுகள் வருகிற 24-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. 70 இடங்களுக்கு 110 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

தற்போது இந்த தேர்வு அடுத்த மாதம் (அக்டோபர்) 29-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவினை புதுவை அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்