போலீசார் வாகன சோதனை
|இந்திராகாந்தி சிலை அருகில் போக்குவரத்து போலீசார் இன்று திடீர் வாகன சோதனை நடத்தினர். அப்போது விதிகளை மீறிய 50 பேருக்கு அபராதம் விதித்தனர்.
புதுச்சேரி
இந்திராகாந்தி சிலை அருகில் போக்குவரத்து போலீசார் இன்று திடீர் வாகன சோதனை நடத்தினர். அப்போது விதிகளை மீறிய 50 பேருக்கு அபராதம் விதித்தனர்.
வாகன சோதனை
புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் தற்போது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அதிக விபத்துகளும் ஏற்படுகின்றன. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் வல்லவன் உத்தரவின் பேரில் புதுவையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின் பேரில், வடக்கு பகுதி போக்குவரத்து போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் நேற்று இந்திராகாந்தி சிலை அருகில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
50 பேருக்கு அபராதம்
அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஒரு வழிப்பாதையில் எதிர்முனையில் வந்தவர்களை பிடித்து அபராதம் விதித்தனர். அதே போல் உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்தவர்களுக்கும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இரு சக்கர வாகனங்களில் லைசென்சு, இன்சுரன்ஸ் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் வைத்திருந்தனரா? என சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டி வந்த 50 பேருக்கு தலா ரூ.500 மற்றும் ரூ.1,000 என அபராதம் விதிக்கப்பட்டது.