< Back
புதுச்சேரி
புதுச்சேரி
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், கள்ளக்காதலி உள்பட 4 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
|2 May 2023 9:20 PM IST
காரைக்காலில் போலி மோசடி நகை வழக்கில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், கள்ளக்காதலி உள்பட 4 பேருக்கு நிபந்தனை ஜாமீனை ஐகோர்ட் வழங்கியுள்ளது.
காரைக்கால்
காரைக்காலில் உள்ள நகை அடகு கடை மற்றும் வங்கிகளில் போலி தங்க நகைகளை அடமானம் வைத்தல் தொடர்பாக பணிநீக்கம் செய்யப்பட்ட புதுச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜெரோம், அவரது கள்ளக்காதலி புவனேஸ்வரி, சிவக்குமார், தேவதாஸ், ரிபாத் காமில் உள்பட 10 பேரை காரைக்கால் நகர போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் ஜெரோம், புவனேஸ்வரி, சிவக்குமார், தேவதாஸ் ஆகிய 4 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோட்டில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து 4 பேருக்கும் நிபந்தனையுடன்ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர்கள் தினமும் காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் காலை, மாலை என 2 வேளை கையெழுத்து போட்டு வருகின்றனர்.