
போலீசார், மாணவர்கள் இறுதிக்கட்ட ஒத்திகை

சுதந்திர தினத்தையொட்டி போலீசார், மாணவர்கள் இறுதிக்கட்ட ஒத்திகையில் ஈடுபட்டனர்.
காரைக்கால்
சுதந்திர தினத்தையொட்டி போலீசார், மாணவர்கள் இறுதிக்கட்ட ஒத்திகையில் ஈடுபட்டனர்.
சுதந்திர தின விழா
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாட்டின் 77-வது சுதந்திர தின விழா கடற்கரை சாலையில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. விழாவில் காலை 9.05 மணிக்கு புதுச்சேரி போக்குவரத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தேசியக்கொடியேற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.
தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.
விழாவில், கலெக்டர் குலோத்துங்கன், மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஸ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், தியாகிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துகொள்கின்றனர்.
இறுதிக்கட்ட ஒத்திகை
இதற்காக கடற்கரை சாலையில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக போலீசார், தீயணைப்புத்துறை, ஹோம்கார்டு, பள்ளி, கல்லூரி என்.சி.சி, என்.எஸ்.எஸ். மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியும் நடக்கிறது. இதையொட்டி அவர்கள் இன்று இறுதிக்கட்ட ஒத்திகையில் ஈடுபட்டனர்.
விழாவையொட்டி பொதுமக்களுக்கு தேவயைான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு செய்தார்.