< Back
புதுச்சேரி
புதுச்சேரி
பழைய இரும்பு கடையில் போலீசார் ஆய்வு
|3 Aug 2023 10:32 PM IST
காட்டுக்குப்பம் அருகே பழைய இரும்பு கடையில் போலீசார் ஆய்வு செய்தனர்.
பாகூர்
காட்டுக்குப்பத்தில் ஒரு பழைய இரும்பு கடையில் கரிமருந்துடன், துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பதாக உளவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் மற்றும் போலீசார் அந்த இரும்பு கடையில் சோதனை செய்தனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து மீண்டும் போலீஸ் சூப்பிரண்டு வம்சிதரெட்டி தலைமையில் போலீசார் பழைய இரும்பு கடைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.