< Back
புதுச்சேரி
புதுச்சேரி
ரெயில், பஸ் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
|14 Aug 2023 9:21 PM IST
நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரெயில், பஸ் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
காரைக்கால்
நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படு்தப்பட்டுள்ளது. விமான நிலையம், ரெயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில்போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் காரைக்காலிலும் போலீசார் இன்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் விழா நடைபெறும் கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் மற்றும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதேபோல் காரைக்கால் மாவட்டத்தின் அனைத்து எல்லையிலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.