பா.ம.க. ஆர்ப்பாட்டம்
|ஜிப்மர் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பா.ம.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பா.ம.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜிப்மர் மருத்துவமனை எதிரே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. புதுவை மாநில அமைப்பாளர் கணபதி தலைமை தாங்கினார். இளைஞர் சங்க செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். வன்னியர் சங்க தலைவர் துரை, துணை அமைப்பாளர் வடிவேலு உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு ஜிப்மர் மருத்துவமனைக்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஜிப்மர் நிர்வாகம் மக்களின் உயிர் மீது விளையாடாமல் உடனடியாக மருந்து தட்டுப்பாட்டை போக்க வழி செய்யவேண்டும். நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் ஏற்படுத்தி தர மறுக்கும் ஜிப்மர் இயக்குனரை உடனடியாக மத்திய அரசு பணிஇடமாற்றம் செய்ய வேண்டும். தமிழ் தெரிந்த மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.