< Back
புதுச்சேரி
சாலை விபத்தில் பா.ம.க. பிரமுகர் படுகாயம்
புதுச்சேரி

சாலை விபத்தில் பா.ம.க. பிரமுகர் படுகாயம்

தினத்தந்தி
|
13 July 2023 4:37 PM GMT

கோட்டுச்சேரி அருகே சாலை விபத்தில் பா.ம.க. பிரமுகர் படுகாயமடைந்தார்.

கோட்டுச்சேரி

திருநள்ளாறை சேர்ந்தவர் கபீர் (வயது 56). காரைக்கால் நகர பா.ம.க. செயலாளர். இவர் தனது நண்பர் கால்மாட்டு வீதியை சேர்ந்த ஹாஜாமொய்தீன் (55) என்பவருடன் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். திருநள்ளாறு சாலையில் பச்சூர் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கபீர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து காரைக்கால் வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்