< Back
புதுச்சேரி
விளைநிலங்களில் சுற்றித்திரிந்த பன்றிகள் அப்புறப்படுத்தப்பட்டன
புதுச்சேரி

விளைநிலங்களில் சுற்றித்திரிந்த பன்றிகள் அப்புறப்படுத்தப்பட்டன

தினத்தந்தி
|
30 Aug 2023 9:47 PM IST

கோட்டுச்சேரி கொம்யூன் பகுதியில் விளைநிலங்களில் சுற்றித்திரிந்த பன்றிகள் கலெக்டர் உத்தரவின்பேரில் பிடித்து அப்புறப்படுத்தப்பட்டன.

காரைக்கால்

கோட்டுச்சேரி கொம்யூன் பகுதியில் விளைநிலங்களில் சுற்றித்திரிந்த பன்றிகள் கலெக்டர் உத்தரவின்பேரில் பிடித்து அப்புறப்படுத்தப்பட்டன.

குறைதீர்க்கும் முகாமில் புகார்

காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நேற்று முன்தினம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் பன்றிகள் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், விவசாயிகளின் விளை நிலங்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாக்குகிறது என்றும், எனவே, பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஏராளமான விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதைத்தொடர்ந்து பன்றிகளை பிடிக்க நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

பன்றிகள் பிடிப்பு

அதன்படி, கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சிவனேசன் மேற்பார்வையில் கழுகுமேடு உள்ளிட்ட பகுதிகளில் விளை நில பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. விளை நிலப்பகுதியில் சுற்றித்திரிந்த பன்றிகளை விரட்டி கண்ணி வைத்தும், வலை விரித்தும் பிடித்து உடனடியாக பணியாளர்களால் வாகனங்களில் ஏற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.

பன்றி வளர்ப்பவர்கள் விளை நிலங்களுக்கோ அல்லது பொது மக்களுக்கோ பாதிப்பு இல்லாத வகையில் பன்றிகளை வளர்க்க வேண்டும். மீறினால் பன்றிகள் பிடித்து அப்புறப்படுத்தப்படும். திருப்பி வழங்கப்படாது என கலெக்டர் குலோத்துங்கன் எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்