< Back
புதுச்சேரி
மர்ம காய்ச்சலால் மக்கள் அவதி
புதுச்சேரி

மர்ம காய்ச்சலால் மக்கள் அவதி

தினத்தந்தி
|
14 July 2023 10:17 PM IST

கிருமாம்பாக்கம் அருகே மர்ம காய்ச்சலால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

பாகூர்

ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிக்கு பொதுமக்கள் படையெடுக்கின்றனர். குறிப்பாக பிள்ளையார்பேட் பகுதியை சேர்ந்த சிறுவன் உள்பட 3 பேர் மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால் டெங்கு, சிக்குன் குனியா பரவி வருமோ? என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையே பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் ஊழியர்கள் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்