தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் படகுகள் மூலம் மீட்பு
|புதுச்சேரி மாகி பிராந்தியத்தில் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
புதுச்சேரி
மாகி பிராந்தியத்தில் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
கனமழை
கேரளாவில் வடமேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தில் கனமழை கொட்டி வருகிறது.
இதேபோல் கேரள மாநில பகுதியில் உள்ள புதுவை மாநிலத்தின் மாகி பிராந்தியத்திலும் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் மழையால் மாகி பகுதி வெள்ளக்காடாக மாறியுள்ளது.
படகு மூலம் மீட்பு
தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை தீயணைப்பு படையினரும், போலீசாரும் படகுகள் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து வருகின்றனர். தொடர்மழை காரணமாக மாகி பிராந்திய பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.